Tuesday, 30 September 2014

தினம் ஒரு குறள் – 74

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 74
அன்பினும் ஆர்வம் உடைமை அதுஈனும்
   நண்பென்னும் நாடாச் சிறப்பு
விளக்கம்:
கலைஞர்:
   அன்பு பிறரிடம் பற்றுள்ள கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
புலியூர்க் கேசிகன்:
  அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும்.

No comments:

Post a Comment