Sunday, 21 September 2014

தினம் ஒரு குறள் – 68

குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 68
   தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
   மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
விளக்கம்:
கலைஞர்:
   பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.
புலியூர்க் கேசிகன்:
    தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள் உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்.

No comments:

Post a Comment