இன்று தந்தை
பெரியாரின் 135 வது பிறந்த தினம்
பெரியாரை பற்றி சில
தகவல்கள்:
தந்தை
பெரியார் என பரவலாக அறியப்படும் ஈ.வே.ராமசாமி ஒரு சமூக சீர்த்திருத்தவாதியாவார்
1.
பெயர் : ஈரோடு வெங்கடப்ப ராமசாமி
2.
பெற்றோர் பெயர் : வெங்கடப்ப நாயக்கர், சின்னத்தாயி
3.
பிறந்த தினம் : செப்டம்பர் 17,1879
4.
மனைவி பெயர் : நாகம்மை மற்றும் மணியம்மை
5.
இறந்த தினம் : திசம்பர் 24,1973 (95 வயது)
·
இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய 3 திராவிட
மொழிகளை பேசும் ஆற்றல் பெற்றவர்.
·
1898- ஆம் ஆண்டு இவர் தனது 19 வத் வயதில்,
13-வயது கொண்ட நாகம்மையை மணந்தார்
·
1921-இல் ஈரோட்டில் நடைப்பெற்ற கள்ளுக்கடை
மறியலில் பெரியார் தன் மனைவி நாகம்மை மற்றும் தமக்கை கண்ணம்மாள் ஆகியோருடன்
ஈடுப்பட்டார்.
·
இந்த கள்ளுக் கடை மறியலின் போது. தன் சொந்த
தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
·
1924 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் நாள் கேரள்
மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவு
போராட்டம் நடத்தி பெற்றார். இதனால் இவர் ‘வைக்கம் வீரர்’ என பாரட்டப்பட்டார்.
·
1930 ஜனவரியில் “குடும்பக் கட்டுபாடு” பற்றிய
புத்தகத்தை வெளியிட்டு, இந்தியாவிலேயே முதன் முதலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
·
1993, மே 11ல் நாகம்மை காலமானார்.
·
நவம்பர் 13,1938-இல் சென்னையில் மறைமலையடிகளின்
மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஈ.வே.ரா வுக்கு
‘பெரியார்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது.
·
1944 –இல் 28 வயதுடைய மணியம்மையை மணந்தார்.
No comments:
Post a Comment