குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம்
– இல்வாழ்க்கை
குறள் எண் – 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை
அளாவிய கூழ்.
விளக்கம்:
கலைஞர்:
சிறந்த
பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின்
பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.
புலியூர்க் கேசிகன்:
தம்முடைய மக்களின் சின்ன்ஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது,
மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.
No comments:
Post a Comment