குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம்
– இல்வாழ்க்கை
குறள் எண் – 67
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி
இருப்பச் செயல்.
விளக்கம்:
கலைஞர்:
தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை
அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
புலியூர்க் கேசிகன்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக்
கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.
No comments:
Post a Comment