Monday, 29 September 2014

தினம் ஒரு குறள் – 73

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 73
   அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
   என்போ டியந்த தொடர்பு.
விளக்கம்:

கலைஞர்:
   உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
புலியூர்க் கேசிகன்:

   அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானாது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர்.

No comments:

Post a Comment