Tuesday, 2 September 2014

தினம் ஒரு குறள் – 50

குறள் பால் – அறத்துப்பால்,இயல் - இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 50
   வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
   தெய்வத்துள் வைக்கப் படும்.
விளக்கம்:

கலைஞர்:
   தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குண்ங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்க்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
புலியூர்க் கேசிகன்:

   உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்.

No comments:

Post a Comment