Saturday, 13 September 2014

தினம் ஒரு குறள் – 60

குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 60
   மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
   நன்கலம் நன்மக்கட் பேறு.
விளக்கம்:

கலைஞர்:
   குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு, அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
புலியூர்க் கேசிகன்:
     மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.

No comments:

Post a Comment