பழமொழி : பாத்திரம் அறிந்து பிச்சையிடு
விளக்கம் :
துறவிகள், பரிதாபத்துக்குரியவர்கள், அங்கவீனர்கள் போன்றவர்களுக்கே நாம் பிச்சையிட வேண்டும். அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும். இந்த உண்மையினைப் புலப்படுத்தும் வகையில் உருவான இப் பழமொழி பிச்சையிடுமுன் பிச்சை கேட்போனின் பாத்திரம் குறித்து நன்கறிந்து செயற்பட வேண்டும் என்று நமக்கு ஆலோசனை கூறுகிறது.
‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்றதும் நம்மவர் சிலர் பிச்சை கேட்பவன் கையிருக்கும் பாத்திரம் சிறியதா? பெறியதா? என்று பார்த்துப் பிச்சையிட வேண்டுமெனப் பொருள் கொண்டு விடுகின்றனர். இது தவறாகும். இங்கு பாத்திரம் என்ற சொல் அவனது தகுதியை, நிலையைக் குறிக்கிறது. பிச்சை கேட்கும் ஆள் எத்தகையவன்? நல்லவனா? கெட்டவனா? வீண் விரயஞ்செய்பவனா? என்று ஆராய்ந்து பார்த்தே பிச்சையிட வேண்டும் என்று இப் பழமொழி நமக்குக் கூறுகிறது. நாம் கொடுக்கும் பொருளை அவன் கெட்ட வழியில் செலவிடுவாயின் அதனால் ஏற்படும் பாவத்திற்கு அன்ன் மட்டுமல்ல பொருள் கொடுத்த நாமூம் உள்ளாவோம்.
No comments:
Post a Comment