Monday, 15 September 2014

தினம் ஒரு குறள் – 62

குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 62
   எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
   பண்புடை மக்கட் பெறின்.
விளக்கம்:

கலைஞர்:
   பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
புலியூர்க் கேசிகன்:

   பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலிம் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா.

No comments:

Post a Comment