Tuesday, 23 September 2014

தினம் ஒரு குறள் – 70

குறள் பால் – அறத்துப்பால்,இயல் –மக்கட்பேறு,அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 70
   மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
   என்நோற்றான் கொல்எனுஞ் சொல்
விளக்கம்:
கலைஞர்:
   “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறுன்பேறு”, என்று ஒரு மகன் புகழ்படுவதுதான், அவன் தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு ஆகும்.
புலியூர்க் கேசிகன்:
  மகன், தந்தைக்குச் செய்யும் உதவி ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ’ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்

No comments:

Post a Comment