குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை
துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள்
வாழ்க்கைத் துணை.
விளக்கம்:
கலைஞர்:
இல்லறத்திற்குரிய பண்புகளுடன்.பொருள் வளத்திற்குத் தக்கவாறு
குடும்பம் நட்த்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
புலியூர்க் கேசிகன்:
இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவாளாகித் தன்னை
மண்ந்தவனின் வளமைக்குத் தகுந்தப்படி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணவியாவாள்.
No comments:
Post a Comment