Thursday, 11 September 2014

தினம் ஒரு குறள் – 58

குறள் பால் – அறத்துப்பால்,இயல் –வாழ்க்கை துணைநலம், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 58
   பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
   புத்தேளிர் வாழும் உலகு.
விளக்கம்:

கலைஞர்:
   நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.
புலியூர்க் கேசிகன்:
    பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வரானால். பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள்.

No comments:

Post a Comment