Friday, 26 September 2014

தினம் ஒரு குறள் – 72

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 72
   அன்பில்லார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
   என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம்:
கலைஞர்:
   அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என் உரிமை கொண்டாடுவர், அன்பு உடையவரோ தம் உடல், பொருள்,ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
புலியூர்க் கேசிகன்:

   அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.

No comments:

Post a Comment