Tuesday, 1 July 2014

தினம் ஒரு குறள் – குறள் 15


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 15:
                    கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
            எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விளக்கம்:
கலைஞர்:

       பொய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதின் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
புலியூர்க் கேசிகன்:
               காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை; அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.

No comments:

Post a Comment