Sunday, 27 July 2014

தினம் ஒரு குறள் – குறள்39


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 39
    அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
    புறத்த புகழும் இல.
விளக்கம்:


கலைஞர்:
          தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் 
வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான 
வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
புலியூர்க் கேசிகன்:

          அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; 
மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் 
இல்லை.

No comments:

Post a Comment