குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம்,
குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.விளக்கம்:
கலைஞர்:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசம்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
புலியூர்க் கேசிகன்:
வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல் உலகில், பசும்புல்லின் தலையைக் காண்பதுங்கூட அருமையாகி விடும்.
No comments:
Post a Comment