Friday, 11 July 2014

தினம் ஒரு குறள் – குறள் 25


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை

குறள் எண் – 25
       ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
       இந்திரனே சாலுங் கரி.

விளக்கம்:
கலைஞர்:
          புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

புலியூர்க் கேசிகன்:
         ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தனுடைய வலிமைக்கு, அகன்ற வானுலகோர் கோமானாகிய இந்திரனே போதிய சான்று.

No comments:

Post a Comment