Tuesday, 15 July 2014

தினம் ஒரு குறள் – குறள் 29


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை

குறள் எண் – 29
     குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
     கணமேயுங் காத்தல் அரிது.
விளக்கம்:

கலைஞர்:
        குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

புலியூர்க் கேசிகன்:
      நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால்,சினத்தை ஒருகணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும்.

No comments:

Post a Comment