Sunday, 13 July 2014

தினம் ஒரு குறள் – குறள் 27


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை
குறள் எண் – 27
      சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
      வகைதெரிவான் கட்டே உலகு.
விளக்கம்:

கலைஞர்:
       ஐம்புலங்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
புலியூர்க் கேசிகன்:
       சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது.

No comments:

Post a Comment