Monday, 14 July 2014

தினம் ஒரு குறள் – குறள்28


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை

குறள் எண் - 28
      நிறைமொழி மாந்தார் பெருமை நிலத்து
      மறைமொழி காட்டி விடும்.
விளக்கம்:

கலைஞர்:
        சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

புலியூர்க் கேசிகன்:
        நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

No comments:

Post a Comment