குறள் பால் – அறத்துப்
பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 32
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின்
ஊங்கில்லை கேடு.
கலைஞர்:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல்
ஒருவருடைய
வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை;
அந்தஅறத்தை மறப்பதை விடத்
தீமையானதும் வேறில்லை.
புலியூர்க் கேசிகன்:
அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு
நன்மையானதும்
இல்லை; அறநெறியைப் போற்றாமல்
மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.
No comments:
Post a Comment