Friday, 25 July 2014

தினம் ஒரு குறள் – குறள்37


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் - 37
    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தான் இடை.
விளக்கம்:

கலைஞர்:
          அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து 
செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப 
துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் 
பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை 
ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் 
சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், 
துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி 
வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
புலியூர்க் கேசிகன்:

          சிவிகையைச் (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் அமர்ந்து 
செல்பவன் ஆகியவரிடையே, ‘அறத்தின் வழி இது தான்’ 
என்று கூற வேண்டாம்.

No comments:

Post a Comment