Saturday, 26 July 2014

தினம் ஒரு குறள் – குறள்38


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 38
    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
     வாழ்நாள் வழியடைக்கும் கல்.
விளக்கம்:


கலைஞர்:
          பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகமால், தொடர்ந்து 
நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் 
சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே 
விளங்கும்.
புலியூர்க் கேசிகன்:

          செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அற்ம் 
செய்வானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை 
அடைக்கும் கல்லாகும். 

No comments:

Post a Comment