Sunday, 20 July 2014

தினம் ஒரு குறள் – குறள்33

குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 33
    ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
விளக்கம்:

கலைஞர்:
          செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா
இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட
வேண்டும்.
புலியூர்க் கேசிகன்:
          நம்மால் முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய
வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல்
தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

No comments:

Post a Comment