Monday, 7 July 2014

தினம் ஒரு குறள் – குறள் 21

குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை

குறள் எண் – 21
      ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பது
      வேண்டும் பனுவல் துணிவு.

விளக்கம்:
கலைஞர்:
         ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

புலியூர்க் கேசிகன்:
          ஒழுக்கத்தில் நிலையாக நின்று, பற்றுகளை விட்டவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்து சொல்லவதே நூல்களின் துணிவு.

No comments:

Post a Comment