Wednesday, 9 July 2014

தினம் ஒரு குறள் – குறள் 23

குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை

குறள் எண் - 23
     இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
     பெருமை பிறங்கிற் றுலகு.

விளக்கம்:
கலைஞர்:
        நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்கள்.
புலியூர்க் கேசிகன்:
        இம்மை. மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்தாகும்.

No comments:

Post a Comment