Thursday, 10 July 2014

தினம் ஒரு குறள் – குறள்24


குறள் பால் அறத்துப் பால், குறள் இயல் பாயிரம், குறள் அதிகாரம்- நீத்தார் பெருமை

குறள் எண் – 24
உரனென்னுந் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 
விளக்கம்:

கலைஞர்:
        உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பான், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

புலியூர்க் கேசிகன்:
       ‘அறிவு’ என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான்.

No comments:

Post a Comment