Friday, 4 July 2014

தினம் ஒரு குறள் – குறள் 18


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 18:
    சிறப்பொடு பூசனை செல்லாது வானம் 
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
விளக்கம்:

கலைஞர்:
         வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? 

புலியூர்க் கேசிகன்:
          மழையானது முறையாகப் பொய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசைகளும் நடைபெறமாட்டா.

No comments:

Post a Comment