குறள் பால் – அறத்துப்
பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம்- அறன் வலியுறுத்தல்
குறள் எண் – 31
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
விளக்கம்:
கலைஞர்:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
புலியூர்க் கேசிகன்:
அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை.
No comments:
Post a Comment