Saturday, 5 July 2014

தினம் ஒரு குறள் – குறள் 19


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 19:
      தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
      வானம் வழங்கா தெனின்.
விளக்கம்:

கலைஞர்:
         இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானல் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

புலியூர்க் கேசிகன்:
            மழை பெய்து உதவாவிட்டால், இந்த பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்.

No comments:

Post a Comment