Monday, 30 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 14


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
விளக்கம்:

கலைஞர்மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

புலியூர்க் கேசிகன்‘மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததானால், பயிர் செய்யும் உழவரும் (விளைபொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.

Sunday, 29 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 13


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 13:
               விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
               உள்நின் றுடற்றும் பசி.
விளக்கம்:

கலைஞர்:
          கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

புலியூர்க் கேசிகன்:
        மழை காலத்தால் பொய்யாது பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப் பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்.

Saturday, 28 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 12


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 12:
           துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
         துப்பாய தூவும் மழை.   
விளக்கம்:
கலைஞர்:
     யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
புலியூர்க் கேசிகன்:
      உண்பவர்களுக்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஒர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.

Friday, 27 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 11


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 11:
               வானின் றுலகம் வழங்கி வருதலால்
          தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
விளக்கம்:
கலைஞர்:
    உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
புலியூர்க் கேசிகன்:
      மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால் மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும்.

Thursday, 26 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 10

குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் எண் 10:
     பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
     இறைவன் அடிசேரா தார்.
விளக்கம்:
கலைஞர்
  வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
புலியூர்க் கேசிகன்:
  இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக்
கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.

Wednesday, 25 June 2014

பழமொழி விளக்கம் - பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

பழமொழி - பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

சுரதா

சுரதா

தினம் ஒரு குறள் – குறள் 9

குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் எண் 9:

         கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
             தாளை வண்ங்காத் தலை.

விளக்கம்:

    கலைஞர்:
               உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

புலியூர்க் கேசிகன்:
              எண்வகைக் குணங்களில் உருவான் இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாத்து.

Tuesday, 24 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 8


 
குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் எண் 8:
             அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
         பிறவாழி நீத்தல் அரிது.

விளக்கம்:

 கலைஞர்:
           அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

புலியூர்க் கேசிகன்:
           அறக் கடலான அந்தண்னின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு, இன்பமும். பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது.

Monday, 23 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 7



குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் எண் 7:

        தனக்குவமை இல்லாதன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
        மனக்கவலை மாற்றல் அரிது.

விளக்கம்:

கலைஞர்:
              ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
புலியூர்க் கேசிகன்:
                தனக்கு யாதென்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.

Sunday, 22 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 6


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் எண் 6:

         பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
         நெறிநின்றார் நீடுவாழ் வார்.
விளக்கம்:

கலைஞர்:
            பொய், வாய். கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

புலியூர்க் கேசிகன்:
            ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின், பொய்மை இல்லாத ஒழுக்கநெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்.

Saturday, 21 June 2014

தினம் ஒரு குறள் – குறள் 5



குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் எண் 5:
           இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

         பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்கம்:
கலைஞர்:
 இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்துக் கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்,நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

புலியூர்க் கேசிகன்:
 இறைவனின் மெய்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா.

Friday, 20 June 2014

தினம் ஒரு குறள் - குறள் 4


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் எண் 4:

         வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

         யாண்டுன் இடும்பை இல.

விளக்கம்:

கலைஞர்:

    விருப்பு வெருப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களிக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

புலியூர்க் கேசிகன்:

    விருப்பும் வெருப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

Thursday, 19 June 2014

இந்தியா – மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும்


இந்தியா



தினம் ஒரு குறள் - குறள்3


குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் எண் 3:

         மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
         நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம்:
கலைஞர்:
          மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
புலியூர்க் கேசிகன்:
          அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்த்வர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.

Wednesday, 18 June 2014

ஆந்திர பிரதேசம் – அரசு குறியீடுகள்

ஆந்திர பிரதேசம்

தினம் ஒரு குறள் - குறள் 2

குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் எண் 2:

   கற்றதனால் ஆய பயனெங்கொல் வாலறிவன்
   நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்கம்:
கலைஞர்:
          தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளிரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை. 
புலியூர்க் கேசிகன்:
          தூய அறிவு வடிவான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.

Tuesday, 17 June 2014

தினம் ஒரு குறள்

 
குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் எண் 1:

         அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

         பகவன் முதற்றே உலகு.

விளக்கம்:

கலைஞர்:    

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு   முதன்மை.

புலியூர்க் கேசிகன்:

    அகர ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.

Monday, 16 June 2014

சிறப்புப் பெயர்கள் - தமிழகம்


1.       தென்னிந்தியாவின் நுழைவுவாயில்  -     சென்னை

2.       தமிழகத்தின் நுழைவுவாயில்        -     தூத்துக்குடி

3.       மலைகளின் இளவரசி               -     வால்பாறை

முதலிடம் - தமிழகம்


1.       அரிசி உற்பத்தித் திறனில் இந்தியாவில் முதலிடம்.

2.       கரும்பு உற்பத்தித் திறனில் உலகிலேயே முதலிடம்.

3.       எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்.

4.       மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் உலகில் முதலிடம்.

5.       மென்பொருள் வல்லுனர்கள் அதிக அளவில் பணியாற்றுவதில் இந்தியாவில் முதலிடம்.

6.       பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்.

7.       அணு மின்னாற்றல் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்.

8.       மாம்பழ உற்பத்தியில் முதலிடம்.