குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் எண் 7:
தனக்குவமை இல்லாதன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
விளக்கம்:
கலைஞர்:
ஒப்பாரும்
மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர
வழியேதுமில்லை.
புலியூர்க் கேசிகன்:
தனக்கு யாதென்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச்
சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.
No comments:
Post a Comment