பழமொழி - ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
விளக்கம்:
இப் பழமொழியை நாம் பன் முறையும் கேட்டுருக்கிறோம். உலக வழக்கில் பேசப்படும் இப் பழமொழியைக் கேட்டால் அதன் அர்த்தம் தவறான கருத்தையே தருகின்றது என்பதை பலரும் உணர்வதில்லை.
இப் பழமொழியை மோலேட்டாகப் பார்த்தால் ஏகப்பட்ட நோயாளிகளைத் தவறான மருந்துகளின் மூலம் கொன்று விட்டு அதிலிருந்து பெறும் அனுபவத்தின் மூலமாகவே ஒருவன் வைத்தியன் என்கின்ற தகுதியை அடைகிறான் என்று தோன்றுகிறது.
உண்மையில்
இப் பழமொழி ‘ஆயிரம் வேரைக் கொன்றவம் அரை வைத்தியன்’ என்றே அமைந்திருத்தல்
வேண்டும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் பல வகையான மூலிகைகளைப் பறித்து வந்து
அவற்றைப் பதப்படுத்துவார்கள். மூலிகைகளை உலர வைப்பார்கள். சிலவற்றைப் பிழிந்து
சாறு எடுப்பார்கள். இவ்விதம் மூலிகைகளைப் பயன்படுத்தும் போதும், பதப்படுத்தும்
போதும், மூலிகைகளிலிருக்கும் கழுவுப் பொருள்களை அகற்றுவார்கள். இவ்விதம்
மூலிகைகளைப் பதப்படுத்தலை ‘மாரணம்’ செய்தல் என்று கூறுவர். மாரணம் என்ற சொல்லுக்கு
வட மொழீல் ‘கொல்லுதல்’ என்னும் பொருள். இப்படி வேரை மாரணம் செய்து மருந்து
தயாரிப்பவன் வைத்தியன். எனவே தான் ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று
பழமொழியைக் கூறினர். ‘ஆயிரம் வேரைக் கொன்றவன்’ என்பதுதான் பழக்கத்தில் ஆயிரம்
பேரைக் கொன்றவன் எனத் திரிபடைந்து விட்ட்து.
No comments:
Post a Comment