குறள் பால் – அறத்துப் பால்,
குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் எண் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர்
புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்கம்:
கலைஞர்:
இறைவன்
என்பதற்குரிய பொருளைப் புரிந்துக் கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்,நன்மை
தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
புலியூர்க் கேசிகன்:
இறைவனின்
மெய்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த
இருவகை வினைகளும் வந்து சேரா.
No comments:
Post a Comment