Friday, 6 June 2014

பழமொழி விளக்கம்: பந்திக்கு முன்னே......... படைக்குப் பின்னே!

பழமொழி - ந்திக்கு முன்னே......... படைக்குப் பின்னே!

விளக்கம்: 

    இப் பழமொழிக்குப் பல்வேறு அர்த்தங்கள் கூறப்படுகின்றன. எங்காவது விருந்து, அன்னதானம் என்றால் நாம் பந்தி இருக்கும் போது முதல் ஆளாகச் செல்ல வேண்டும். முதற் பந்தியில் உட்கார வேண்டும். முதற் பந்திக்கே சகலவிதமான உண்வுப் ப்தார்த்தங்களும் பரிமாறப்படும். எனவே நாம் பந்திக்கு முந்திக் கொள்ள வேண்டும். கடைசியாகப் பல கிடைக்காமல் போகும். ஆகவே பந்திக்கு முன்னே என்றார்கள்.
    
      போர் நிகழும் போதும் படையின் முன் வரிசையிற் செனறால் உயிரிழக்க நேரிடும். பின்வரிசையில் பின்னுக்குச் சென்றால் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம். எனவே போருக்குப் போகும் போது பின்னே செல்ல வேண்டும். இதுவே இப் பழமொழியின் கருத்தாகும் என்பர் முன்னோர்.

     இக் கால்த்தில் இப் பழமொழிக்குப் புதியதோர் அர்த்தம் கூறப்படுகிறது. உணவு உண்ணும் போது நமது வலது கையினால் முன்னால் எடுத்து உண்போம். நம் முன்னோர்கள் பண்டைக்காலத்தில் படையிற் செல்லும் போது எதிரிகளை அழிக்க வல்ல் அம்புகளை தம்முதிகில்தான் வைத்து இருப்பார்கள். அவற்றை எடுப்பதற்கு வலது கையைப் பயன்படுத்துவார்கள். வலது கை பின்னால் செல்ல நேரிடும். அதனாலேயே பந்திக்கு முன்னே; படைக்குப் பின்னே என்று கூறுவார்கள். வலது கையின் செயற்பாட்டை வைத்து இப்புதிய அர்த்தம் கூறப்படுகிறது.

    இப் பழமொழிக்கு வேறோர் க்ருத்தும் கூறப்ப்டுகிறது. ‘படைக்கு பிந்து’ என்பதனைக் கோழைத்தனத்தின் குணமெனக் குறைத்து மதிப்பிடாதீர். தாமதம், தரத்தை உயர்த்தும் எனக் கொண்டு, த்குந்த திட்ட்த்தோடு, வீயூகம் அமைத்துப் படைகளைத் திரட்டிச் செல்லும் பக்குவத்தைப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment