Wednesday, 25 June 2014

பழமொழி விளக்கம் - பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

பழமொழி - பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!
விளக்கம் 
   திருமண வைபவங்களில் வேறு மங்கல நிகழ்வுகளின் போதும் “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்துவதைக் கண்டிருக்கிறோம். அவ்வாறு வாழ்த்தும் போது பதினாறு குழந்தைச் செல்வங்களைப் பெற்று மகிழ்ச்சிகரமாக வாழுங்கள் என்கிற கருத்திலேயே சொல்கிறார்க்ள் எனப் பலரும் கருதுகின்றனர். இது தவறாகும். உண்மையில் இப் பழமொழியின் பொருள்தான் என்ன?
   இல்வாழ்க்கையில் பெறத்தக்க பேறுக்ள் பதினாறு வகைப்படும்.
அவை புகழ், கல்வி,வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன்,நெல்,நல்லூழ், இள்மை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, துணிவு, நோயின்மை, நீண்ட ஆயுள் என்பவனவாகும். இந்தப் பதினாறு
பேறுக்ளையும் பெற்று வாழ்க என் வாழ்த்துவதாகவே இப் பழமொழிக்கு பொருள் காணவேண்டும்.

   மனித வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமைய இந்தப்  ஓதினாறு பேறுக்ளும் தேவையென நம் முன்னோர் கருதினர், அதனாலேயே புதுமண்த் தம்பதிகளை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கென நம் முன்னோர் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment