குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம்,
குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 13:விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி.
விளக்கம்:
கலைஞர்:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
புலியூர்க் கேசிகன்:
மழை காலத்தால் பொய்யாது பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப் பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்.
No comments:
Post a Comment