குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம்,
குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 11:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
விளக்கம்:
கலைஞர்:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
புலியூர்க் கேசிகன்:
மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள்
வாழ்கின்றன; ஆதலால் மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும்.
No comments:
Post a Comment