Sunday, 31 August 2014

தினம் ஒரு குறள் – 48


குறள் பால் – அறத்துப்பால்,இயல் - இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 48
   ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
   நோற்பாரின் நோன்மை உடைத்து.
விளக்கம்:

கலைஞர்:
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நட்க்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையாதாகும்.
புலியூர்க் கேசிகன்:

   பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பைவிட வலிமையானது ஆகும்.

No comments:

Post a Comment