Friday, 29 August 2014

தினம் ஒரு குறள் – 46

குறள் பால் – அறத்துப்பால்,இயல் - இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 46
   அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
   போஒய்ப் பெறுவ தெவன்.
விளக்கம்:

கலைஞர்:
   அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.
புலியூர்க் கேசிகன்:

   அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானால், அவன் வேறு நெறியிலே போய் வருவது என்ன?

No comments:

Post a Comment