Thursday, 28 August 2014

தினம் ஒரு குறள் – 45

குறள் பால் – அறத்துப்பால்,இயல் - இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 45
   அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
   பண்பும் பயனும் அது.
விளக்கம்:

கலைஞர்:
   இல்வாழ்க்கை பண்புடையாதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
புலியூர்க் கேசிகன்:
   கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப் படியே


வருவதும் உடையதனால், இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே 


ஆகும்.

No comments:

Post a Comment