குறள் பால் – அறத்துப்பால்,இயல் -
இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 43
தென்புலத்தார்
தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா
றோம்பல் தலை.
விளக்கம்:
கலைஞர்:
வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப்
போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவோற்றத் தன்னை
நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுகுரியனவாம்.
புலியூர்க் கேசிகன்:
தென்பலத்தார்,
தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல்
இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.
No comments:
Post a Comment