Wednesday, 27 August 2014

தினம் ஒரு குறள் – 44

குறள் பால் – அறத்துப்பால்,இயல் - இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 44
       பழயஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
       வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல.
விளக்கம்:

கலைஞர்:
   பழிக்கு அஞ்சாமல் சேர்த்தப் பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
புலியூர்க் கேசிகன்:

   பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்டு உண்ணும் இயல்பும் உடையதனால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.

No comments:

Post a Comment