Thursday, 9 October 2014

தினம் ஒரு குறள் – 78

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 78
   அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
   வற்றல் மரந்தளிர்த் தற்று.
விளக்கம்:
கலைஞர்:
   மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
புலியூர்க் கேசிகன்:
   உள்ளத்தில் அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலைநிலத்திலே காய்ந்தமரம் தளிர்த்தாற்போல நிலையற்றதாகும். 

No comments:

Post a Comment