Tuesday, 7 October 2014

தினம் ஒரு குறள் – 77

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 77
   என்பு லதனை வெயில்போலக் காயுமே
   அன்பி லதனை அறம்.
விளக்கம்:
கலைஞர்:
   அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வாய்க்கும் அது வெயிலிம் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
புலியூர்க் கேசிகன்:
   எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும்.

No comments:

Post a Comment